புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் பொறுப்பேற்றார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ராணுவ தளபதி பிக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுகாக், இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நாட்டின் 26-வது ராணுவ தளபதியான அவர், 30 மாதங்கள் அப்பதவியில் இருப்பார். அவருக்கு வயது 59. அவர், கடந்த 1987-ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் ஆவார். கடந்த மே மாதம், காங்கிரஸ் கூட்டணி அரசின் இறுதிக்காலத்தில், தல்பீர்சிங் சுகாக், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும், பா.ஜனதாவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி சுகாக்கின் நியமனம் இறுதியானது எனவும், அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாக்கிடம் தற்போதை ராணுவ தளபதி பிக்ரம் சிங் பொறுப்புகளை ஒப்படைத்து பின் விடைபெற்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.