காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம்: ஜெயலலிதா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் ஸ்ரீஜேஷ் பரத்து ரவீந்திரன் மற்றும் ரூபிந்தர் சிங் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று 2011ல் தான் அறிவித்ததை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு ஸ்ரீஜேஷ் பரத்து ரவீந்திரன் மற்றும் ரூபிந்தர் சிங் தகுதி பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்கள் எதிர்காலத்தில் இந்தியா சார்பிலும் தமிழ்நாடு சார்பிலும் பல்வேறு வெற்றிகளை பெறவும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.