அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.டெக். படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளாண், எம்.ஆர்க். ஆகிய படிப்புகளில் சேர கேட், டான்செட் ஆகிய நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நேற்று தொடங்கியது. நேற்று கேட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. 1,186 இடங்களுக்கு 1020 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இன்று (சனிக்கிழமை) முதல் கேட் தேர்வு அல்லாது டான்சட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு 27-ந்தேதி முடிவடைகிறது. இதில் 19ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் 14 ஆயிரம் பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.