வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைக்கிறார். புனிதம் செய்யப்பட்ட கொடி வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும். அதன்பின் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெறும். தொடர்ந்து நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவையொட்டி, பாதிரிமார்களும், அருட்சகோதரிகளும், லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்கின்றனர். 8ம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு ஆண்டுத்திருவிழா நிறைவடையும். இதையொட்டி, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாக வந்த வண்ணம் உள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.