மின் கட்டணத்தைக் குறைக்க தொடர் ஆய்வு அவசியம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தவிர்க்க முடியாத தேவைகளுள் ஒன்றாகத் திகழ்ந்துவரும் மின்சக்தி உற்பத்திக்கான கட்டணத்தைக் குறைக்க தொடர் ஆய்வு அவசியம் என்று தமிழ்நாடு மின் சீரமைப்புக் கழகம் செயலர் எஸ்.குணசேகரன் வலியுறுத்தினார். ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மின்னியல்,மின்னணுவியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற மின்னியல் மாணவர் பொறியாளர் சங்கம் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது வாழ்வின் உயிரோட்டமாகத் திகழ்ந்து வரும் மின்சக்தித்துறையில் மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்த ஏராளமான வாய்ப்புகள் பெருகி உள்ளன.மின்சக்தி உதவியின்றி எதுவும் இயங்காது என்ற அளவில் நாம் மின்சக்தியைச் சார்ந்து,வாழ வேண்டிய நிலை உருவாகி விட்ட்து.எனவே மின்துறை தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்களை தொடர் ஆய்வு நடவடிக்கைகள் மூலம்தான் சீரமைக்க முடியும்.மேலும் மின்சக்தியை ஒவ்வொரு தனிநபரும் பயன்படுத்தும் அளவிலான வளர்ச்சி, தேவையை அதிகரித்துள்ளது என்றார். மின்னியல் துறைத் தலைவர் கே.கலைச்செல்வி,ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜோஸ்லின்,மாணவர் தலைவர் பி.ஆனந்த்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.