உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எலுமிச்சை டயட்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

1உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எலுமிச்சை டயட் அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். காலை உணவு எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும். எலுமிச்சை- தேன் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும். எலுமிச்சை ஜூஸ் ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். லெமன் பை(Lemon Pie) டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது. எலுமிச்சை சூப் எடையை குறைக்க நினைக்கும் போது அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும், அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும். உடல் எடையை குறைக்க எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்? 30 வருடங்களுக்கு முன்பு, அம்மா நான் கோகோ, ரன்னிங்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் என்று பெருமையோடு சொன்னால், போதும்டீ நீ படிக்க ஸ்கூல் போறியா? இல்லை, விளையாடப் போறியா? படிப்பை முதல்ல கவனி என்று விளையாட்டுக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். ஒல்லி உடம்பு கொஞ்சமாவது தேறுமா? என்று பிள்ளைகளைப் பற்றிய ஏக்கமும், கனவும் அன்றைய பெற்றோருக்கு இருக்கும். உடலில் துளியும் எடைகூடாத அளவுக்கு விளையாட்டு, வீட்டு வேலை, சத்தான உணவு என அருமையான வாழ்க்கை முறையாக இருந்தது. ஆனால் இன்றோ, டீன் ஏஜ் பிள்ளைகளின் உடல் எடையைக் குறைக்க வழிதேடும் பெற்றோர். நாற்பது வயதில், வயிறு பெருத்து நடக்கக்கூட முடியாமல் திணறும் பெண்கள் மற்றும் ஆண்கள். விளைவு, தெருவுக்குத் தெரு, ஜிம். வீட்டுக்கு வீடு நடைபயிற்சி, ஓடுற மெஷின்கள். எடையைக் குறைக்க என்னவெல்லாம் வழி? என்பது குறித்து, எழும்பூர் குழந்தை நல மருத்துவர் எஸ். ஸ்ரீனிவாசன், ஊட்டச் சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விரிவாகப் பேசுகின்றனர். எடை கூட காரணங்கள்: எடை ஒரேநாளில் அதிகரித்துவிடுவது இல்லை. நம்முடைய தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மருத்துவரீதியான பிரச்னை காரணமாக உடல் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கிறது. சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவை உட்கொள்வது, இரவு நேரங்களில், பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது கூடவே கூல்டிரிங்ஸ் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணம். உடல் எடையைக் குறைக்க உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், ஒரு நாளைக்கு 1,600 கலோரி உள்ள உணவையும் பெண், 1,200 கலோரி எடை உணவையும் உட்கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைப்பதன் ரகசியம், நாம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது, சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பது நம் உடலின் வளர்சிதை மாற்றங்களைப் பாதித்து உடல் நலத்துக்கு வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கான பொது விதிகள் எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற உணவுக்கட்டுப்பாடு மிகமிக முக்கியம். இது உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிக அளவு கலோரி உள்ள, அதேநேரம் ஊட்டச்சத்து சிறிதும் இல்லாத கூல் டிரிங்ஸ், நொறுக்குத் தீனி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு அதிக வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன. வயிறு நிறைந்துவிட்ட உணர்வை மூளை அடைய, குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். எனவே, அவசர அவசரமாக உணவை எடுத்துக்கொள்ளவேண்டாம். உணவு சாப்பிடும் நேரம் மிக நீண்டதாக இருக்கட்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டியது இல்லை. அப்படித் தவிர்ப்பதன்மூலம் அது நம் உடலில் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும். சூப், ஜூஸ், பால் என போன்ற நீராகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு, பசி உணர்வு தோன்றாமல் பார்த்துக்கொள்ளும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க, உடல் பருமன் குறைப்பு வல்லுனரின் ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள். ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட டயட் உணவை, மற்றவர் பின்பற்றுவது மிகவும் தவறு. உணவாலும் உடல் இளைக்கும்! நல்ல புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரி தேவையெனில், அதில் 500 கலோரியைக் குறைத்தாலே போதும். மாதம் இரண்டு கிலோ எடை குறைந்துவிடும் என்றவர் ஒருநாள் உணவை பட்டியலிடுகிறார். ஒரு நாள் உணவு! காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர். அரை மணி நேர நடைப்பயிற்சி. வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்) புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்) 10 மணிக்கு மோர், 11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ், 12 மணிக்கு இளநீர், மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம். வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.) 200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை. நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும். நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி. ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப். காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம். இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி. தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். டயட்ல இருக்கீங்களா? இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க டயட்டில் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும். குறிப்பாக உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்ளும் போது, இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை டயட்டில் சேர்த்தால், அது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் அனைத்தும் பெரும்பாலானோரது விருப்பமாக இருக்கும். இருப்பினும் இந்த உணவுகளில் கவனமாக இருந்தால், நிச்சயம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். பிரட் பிரட்டில் வெள்ளை பிரட்டை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் கோதுமை பிரட்டை விட, அதிக அளவில் கலோரிகள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரிக்கும். இனிப்புகள் உலகில் பஞ்சு மிட்டாய் போன்ற இனிப்புக்களை விரும்பாதோர் யாரும் இருக்கமாட்டார்கள். இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்தால், அது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். செரில் இன்றைய அவசர உலகில் இனிப்பு கலந்த பல்வேறு செரில்கள் விற்கப்படுகின்றன. இத்தகைய இனிப்பு கலந்த செரில்களை அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்று காலை வேளையில் உணவாக எடுத்துக் கொண்டால், பின் அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும். எண்ணெய் உணவில் எண்ணெயை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும். அதற்காக எண்ணெயை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆகவே கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வெஜிடேபிள் ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பால் பொருட்கள் டயட்டில் இருக்கும் போது, பால் பொருட்களை தொடவே கூடாது. அதிலும் ஸ்கிம் செய்யப்படாத பால் மிகவும் ஆபத்தானது. எனவே உடல எடை குறைய வேண்டுமானால், ஸ்கிம் செய்யப்பட்டாத பால் சேர்க்காமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் நன்கு ஸ்கிம் செய்யப்பட்ட பாலை அருந்தலாம். உருளைக்கிழங்கு உலகில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. ஆனால் இந்த உருளைக்கிழங்கை உடல் எடையை குறைக்க நினைக்கும் போது சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரித்துவிடும். வாழைப்பழம் என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் வாழைப்பழத்தை டயட்டில் உள்ளோர் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அதில் அதிக அளவில் கலோரிகள் இருப்பதால் தான், இது உடலுக்கு அதிகப்படியான சக்தியைக் கொடுக்கிறது. அதே சமயம் அதிக அளவில் சேர்த்தால், அதுவே உடல் எடையை அதிகரிக்கும். ஜங்க் உணவுகள் தற்போது ஜங்க் உணவுகள் தான் ஆங்காங்கு விற்கப்படுகின்றன. மேலும் அந்த உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்கு பல்வேறு சுவையூட்டும் பொருட்கள் சேர்ப்பதோடு, எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதால், அவை உடல் நலத்திற்கு கெடுதலை விளைவிக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பதப்படுத்தப்பட்ட இறைச்சியை டயட்டில் இருப்போர் அறவே சாப்பிடக்கூடாது. வேண்டுமெனில் புதிதாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை சாப்பிடலாம். உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ் இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்னை. அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் பெண்களுக்கு உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி. வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சீசன்கால பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது. பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும். இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம். டயட் பற்றிய டவுட்! பட்டினி கிடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது தவறான கருத்து. எடை குறைக்க விரும்புபவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைக்கவேண்டும். பழங்கள், காய்கறிகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும். நீராகாரமாக மட்டும் சாப்பிட்டால் வயிற்றின் உட்புறச் சுவர்கள் பாதிக்கப்படும். இதனால் அல்சர் வரும் வாய்ப்புகள் அதிகம். திட மற்றும் திரவ உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலமே மலச்சிக்கல் வராமல் இருக்கும். ரெசிபிகள்: ரெசிபிகள்: கோஸ் சூப் - செய்முறை: 200 கிராம் கோஸை பொடியாக நறுக்கி, நீர் விட்டுக் கொதிக்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.