தென் இந்தியாவில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா கழகம் ஏற்பாடு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், புரட்டாசி மாதம் தென் இந்தியாவில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, திருப்பதிக்கு பக்தர்கள் ஒருநாள் சுற்றுப்பயணமாக வால்வோ பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்து தருகிறது. சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 11 மணிக்கு சென்னை திரும்பும் இந்த சுற்றுலாவில் பங்கேற்க பெரியவர்களுக்கு ரூ. 1500ம் சிறுவர்களுக்கு ரூ.1200ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மலை நாட்டு திருப்பதிகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செல்லலாம். இதன் கீழ் பாலக்காடு, குருவாயூர், கொச்சி, திருப்புலியூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருப்பதிகளும் உள்பட பல்வேறு மலை திருத்தலங்களில் உள்ள பெருமாள் கோவில்களை தரிசிக்கலாம். புதன்கிழமை புறப்பட்டு ஞாயிறு சென்னை திரும்பும் இந்த பயணத்துக்கு பயணிகள் கட்டணம் தலா ரூ. 6 ஆயிரத்து 200. இதுபோல் பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் சுற்றுலா இதன்கீழ் திருமயம், திருத்தங்கள், ஸ்ரீ வில்லிபுத்தூர், திருக்க றுங்குடி, ஆழகர்கோவில், ஸ்ரீ ரங்கம் உள்ளிட்ட கோவில்களுக்கு 5 நாள் சுற்றுலா செல்லலாம். இதற்கு இருவர் தங்கும் வசதியுடன் ரூ. 5,700ம் ஒருவர் தங்கும் வசதிக்கு ரூ. 4,700ம் சிறுவருக்கு ரூ.4,100 கட்டணமாக பெறப்படும். இது தவிர ஒரு நாள் சுவாதி நரசிம்ம பெருமாள் சுற்றுலா, ஒருநாள் திருவோணம் பெருமாள் சுற்றுலா, ஒரு நாள் ஒன்பது பெருமாள் தரிசன சுற்றுலா, ஒரு நாள் காஞ்சீபுரம் திவ்ய தேசம் சுற்றுலா ஆகியவற்றுக்கும் தமிழ்நாடு சுற்றுலா வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. 3 நாள் மகாளயா அமாவாசை சுற்றுலா சென்னையில் இருந்து வருகிற 21ந் தேதி மாலை 4 மணிக்கு பஸ் புறப்பட்டு 22ந் தேதி திருபுலானி, தேவிபட்டினம், ராமர்பாதம், அனுமன்பாதம், அக்னி தீர்த்தம் தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்கு செல்கிறது. 23ந் தேதி ராமேஸ்வரததில் முன்னோர்களுக்கு திதி செலுத்தி விட்டு 24ந் தேதி காலை 6 மணிக்கு சென்னை திரும்பலாம். இதற்கு கட்டணம் ரூ.2,800. சுற்றுலாப் பயணம் பற்றிய விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.