பசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்து மகா சபா சென்னையில் ஆர்ப்பாட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப்;9- பசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்து மகா சபாயின் தமிழ்நாடு சென்னை மண்டல நிர்வாகிகள் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் இன்று (9-2-11)ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தலைவர் டி. சஞ்சய்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்டத்தலைவர் என். தரணிகுமார் தலைமை வகித்தார். மத்திய சென்னை மாவட்டத்தலைவர் எம். பிரேம்குமார், தென் சென்னை மாவட்டத்தலைவர் எஸ். வேல்முருகன், காஞ்சி மாவட்டத்தலைவர் பொன்சிவா, செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து மகா சபா தமிழ் மாநில தலைவர் வசந்த குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகையில், தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறுகால விடுமுறையை 6-மாதமாக நீடிக்கவேண்டும் என்றும், விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும், வலியுறித்தினார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநிலங்கள் தோறும் விற்பனை வரியை குறைக்க வேண்டும் எனவும் கூறினார். தமிழக மீனவர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் இலங்கை அரசுடனான உறவை துண்டித்துக்கொள்வதோடு, கட்சத்தீவை மீட்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் M.காமராஜ், P. சுனில்குமார், K.R. பிரியா, M.சந்திரன், G. கவுரிசங்கர், புல்லட் தர்மன், குருமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறித்தி உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்ட முடிவில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ். மணிகண்டன் நன்றியுரையாற்றினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.