ஆசிய விளையாட்டு போட்டி: முதல்நாளில் தங்கம், வெண்கலத்துடன் பதக்க வேட்டையில் இந்தியா!!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்நாளான இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளனர். முதல்நாளான இன்று ஸ்வேதா சவுத்ரி வெண்கலப் பதக்கத்தையும், ஜித்துராஜ் தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டி, தென்கொரியாவில் வெள்ளிக்கிழமை மாலை கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் இந்திய அணி, ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. முதல்நாளான இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்று பதக்க பட்டியலில் இடம்பிடித்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஸ்வேதா சவுத்ரி, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் சீனாவுக்கு தங்கமும், தென் கொரியாவுக்கு வெள்ளியும் கிடைத்தது. வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்வேதா சவுத்ரி ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் ஆவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜீத்து ராய் முதலிடம் பிடித்தார். பதக்கத்துக்கான போட்டியில் வியட்நாம் வீரரை தோற்கடித்து தங்கம் வென்றார். தங்கத்தை தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் 8.4 புள்ளிகள் சேர்த்து ஜீத்து ராய் சாதனை படைத்தார். மொத்தத்தில் 184.2 புள்ளிகள் சேர்த்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். முதல் நாளான இன்று வாள் சண்டை, நீச்சல், துப்பாக்கிச் சுடுதல் ஆகிய போட்டிகளில் தலா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது. தென் கொரியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெண்கலப்பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வியட்நாம் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. மக்காவ் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.