மதிமுக நடத்திய பேச்சுப்போட்டி நிறைவு: திருச்சி கல்லூரி மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கல்லூரி மாணவர்களின் சொல்லாற்றலை வளர்த்திடும் வகையில் ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் வைகோவின் வெல்லும் சொல் எனும் தலைப்பில் மாநில அளவில் நடத்திய பேச்சுப்போட்டியின் நிறைவுச்சுற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கம்மவார் மகாலில் நேற்று நடந்தது. போட்டிக்கு தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு. அரசேந்திரன், மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் முகிலை ராஜபாண்டியன், தியாகராய நகர் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.உமாமகேசுவரி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். இதில் ரூ. ஒரு லட்சத்துக்கான முதல் பரிசை திருச்சி காவேரி கலைக் கல்லூரியைச் சேர்ந்த நா.சாத்தம்மை பிரியாவும், ரூ.50 ஆயிரத்துக்கான 2ம் பரிசை ஈரோடு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ப.சத்தியவதியும், ரூ. 25 ஆயிரத்துக்கான 3ம் பரிசை நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி.பிர்ஜ்யாவும், ரூ. 10 ஆயிரத்துக்கான ஆறுதல் பரிசை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக மாணவர் ம.குறிஞ்சிக் கொற்றவன் ஆகியோரும் வென்றனர். சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு அளித்து வாழ்த்தினார். பரிசு தொகை மற்றும் வெற்றிப்பெற்ற மாணவமாணவிகளுக்கான விருதுகளை மதுரையில் அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெறும் விழாவில் வைகோ வழங்க உள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.