ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் சௌரவ் கோசல் வெள்ளி பதக்கம் வென்றார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியா நாட்டில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிபோட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல், மலேசிய வீரரா ஆங் பெங் ஹீயை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா வீரர் கோசல், மலேசிய வீரரின் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறினார். முதல் செட்டில் ஈடுகொடுத்து விளையாடினாலும் கோசல் 9-11 என செட்டை இழந்தார். ஆனால், 2-வது செட்டை 4-11 என்றும், 3-வது செட்டை 5-11 என்ற கணக்கிலும் போட்டியின்றி விரைவில் இழந்தார். 45 நிமிடங்களே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் கோசல் 0-3 என நேர் செட் கணக்கில் தோற்றார். இதனால் கோசலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக வெள்ளிப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமையை கோசல் பெற்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.