பிரம்மோற்சவ விழாவிற்கு தயாராகும் திருப்பதி: இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளதை ஒட்டி கோவிலை தூய்மைபடுத்தும் இன்று காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டதால் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது. சுப்ரபாதம், தோமாலை சேவைகள் மட்டும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பிரம்மோற்சவத்தை யொட்டி வருகிற 25-ஆம் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை (26-ஆம் தேதி) கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. அக்டோபர் 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரமோற்சவத்தையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முதியோர், ஊனமுற்றோருக்கான நேரடி தரிசனமுறை உள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் இந்த நேரடி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.