மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டி: தமிழக வீரர்களுக்கு நிதி உதவி வழங்கினார் ஜெயலலிதா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12 முதல் 19 வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அழைப்பு சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தலா 30 ஆயிரம் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது இருவழி விமான பயணக் கட்டணம், நுழைவுக் கட்டணம், விசா கட்டணம், காப்பீட்டுக் கட்டணம், கையாளுதல் கட்டணம் போன்ற செலவினங்களுக்காக தலா ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் செலவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு மொத்த தொகையை வழங்க வேண்டுமென முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையினை கனிவுடன் ஏற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற அழைப்பு சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான எஸ். குருநாதன், பி.ராசாத்தி, சி.பூங்கொடி, கே.ஜே.அந்தோணி, கே.சாந்தமுத்துவேல், பி.படைத்தலைவன், எஸ். திருமலைக்குமார் ஆகிய 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பினமாக தலா ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து நிதியுதவியினை பெற்றுக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற அழைப்பு சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பட்ட செலவினங்களை முழுமையாக கருணை உள்ளத்தோடு வழங்கியமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.