பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலை.யில் மென்பொருள் ஆய்வு நடவடிக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம்,மாணவர்களுக்கு மென்பொருள் தயாரிப்புத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி,ஆய்வு,வளர்ச்சி நடவடிக்கை மேற்கொள்ள ஆஸ்திரேலியாவைத் தலைமையகமாகக் கொண்ட ஸ்பார்க்ஸ் சிஸ்டம்ஸ் மென்பொருள் தயாரிப்புத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளன. இது குறித்து பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீன் செய்தியாளர்களிடம் கூறியது மாணவர்களுக்குப் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அவர்களது ஆய்வுத்திறனை மேம்படுத்துவதில் தனித்திறனுடன் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகின்றது. தற்போது தொழில்நுட்பக்கல்வி பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில்நிறுவனங்களின் தேவைக்கேற்ப, மாணவர்களின்தொழில்நுட்ப மனிதவளத்திறனை மேம்படுத்தி ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளோம். தொழில் நிறுவனங்களில் சேர்ந்து அங்கு பணிபுரிவதற்குத் தேவையான அடிப்படை தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் திறனை மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பெறவும், மேம்படுத்தவும் உறுதுணையாகத் திகழும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்பார்க்ஸ் சிஸ்டம்ஸ் என்ற வங்கி,காப்பீட்டுத்துறை நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்துடன் தற்போது பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் மென்பொருள் தயாரிப்புத்தொழில்நுட்பம் குறித்த அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும்.மேலும் மாணவர்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கு ஸ்பார்க்ஸ் தொழில் நுட்பம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கி ஊக்குவிக்க வகை செய்யப்பட்டுள்ளது என்றார். ஸ்பார்க்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நிஜாம் முகமது பேசும்போது,சர்வதேச அளவில் எண்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ட் என்ற மென்பொருள் உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கி வரும் ஸ்பார்க்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம்,அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நோக்குடன் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.