ஆர்யா, விஷால் நடிப்பில் பாலாவின் ஐந்தாவது படைப்பாக \'அவன் இவன்\'

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாலாவின் ஐந்தாவது படைப்பாக \'அவன் இவன்\' உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாலா படம் என்றாலே படப்பிடிப்பு தாமதமாகும் என்பது வழக்கம், ஆனால் அதற்கேற்றவாறு அவர் இதுவரை தந்த நான்கு படைப்புகளும் தேசிய அளவில் பேசப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. இதைப் பற்றி ஒருமுறை பேசிய பாலா... படம் நல்லா இருக்கா இல்லையா என்பதை மட்டும் சொல்லுங்கள். ஷூட்டிங் பிரச்சனைகளை நானும் தயாரிப்பாளரும் பேசிக்கொள்கிரோம் என்று சொன்னார். \'அவன் இவன்\' படத்தில் விஷால் ஆர்யா இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே வித்யாசமான கதாபாத்திரம். படம் வந்த பிறகு அதில் நடித்தவர்கள் நடிப்பைப் பார்த்து இவருக்கு விருது கிடைக்கும் என்று பேசிக்கொள்வது வழக்கம். ஆனால் படம் ஷூட்டிங் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் இந்தப் படத்திற்கு விஷால் நிச்சயம் விருது வாங்குவார் என பேசிக் கொள்கிறார்கள். இதைப் பற்றி பேசும் விஷால்... உண்மையில் படத்தின் ஷூட்டிங்கிற்கு நான் தான் காரணம் என்று புருவம் உயர்த்த வைக்கிறார். இப்படி ஒரு ஹீரோவா! என்று யோசிப்பதற்குள்... இந்தப் படத்தில் எனக்கு ஒன்றரைக் கண். ரொம்ப கஷ்டப்பட்டு தான் நடித்தேன். உலகத்தின் எந்த மொழியிலாவது இந்த மாதிரி யாராவது நடித்திருக்கிறார்களா என்று ரெபெரன்சுக்காக தேடிப் பார்த்தேன். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. இந்த முயற்சியை நான் தான் முதலில் செய்கிறேன் என்றால் எனக்கு பெருமையாகத்தான் உள்ளது. ( அப்போ கண்டிப்பா விருது இருக்கு! ). ஷூட்டிங்கின் போது கண்ணை அப்படி வைத்துக்கொண்டு ஒரு ஏழு எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண் பார்வை மங்கலாகிவிடும். அதனால் தான் ஷூட்டிங் தாமதமானது என்கிறார் விஷால். ஆர்யாவோடு சேர்ந்து நடித்த அனுபவத்தைக் கேட்டால்... இப்போது இருக்கிற தமிழ் சினிமாவின் சூழலில் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எனக்கும் ஆர்யாவுக்கும் எந்த ஈகோவும் கிடையாது. சொல்லப்போனால் என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்து வந்ததே ஆர்யா தான். ஆனால் படத்தில் என்னிடம் அவர்தான் செம அடிவாங்கியிருக்கார் என்று ஜாலி கமெண்ட் அடிக்கிறார் விஷால். விரைவில் திரையில் மிரட்ட இருக்கிறார் விஷால்...
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.