குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது.பிரபல நகைச்சுவை சொற்பொழிவாளரும்,பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது சிறப்புரையில் முத்தமிழை மா,பலா,வாழை ஆகிய முக்கனிகளுக்கு நிகராக ஒப்பிட்டுப் பேசியது அனைவரது கருத்தையும்,கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.விழாவில் அவர் வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகள் எழுதிய கவிதைகள் அடங்கிய புதுக்குரல்கள் கவிதை நூலை வெளியிட சொல்லின் செல்வி பாரதி திருமகன் பெற்றுக் கொண்டார். விழாவில் மாணவி டி.ரோஜா பங்கேற்ற கவிஞாயிறு தாராபாரதி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும்,மாணவிகளின் நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் கலைமாமணி கோவை அனுராதா,கல்லூரி முதல்வர் ஜி.ராணி,தமிழ்த் துறைத் தலைவர் செந்தமிழ்ச் செல்வி,உதவி பேராசிரியர்கள் கே.ஜெகதீஸ்வரி,எஸ்.விசாலாட்சி,ஆர்.சரஸ்வதி உள்பட ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.