ஆசிய விளையாட்டில் சரிதாவுக்கு 'அநீதி' அறிக்கை கேட்டது மத்திய அரசு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆசிய விளையாட்டில் சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிப்பிக் அசோசியேஷனை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் நடுவர்களின் அதிகபட்ச கருணை உள்ளூர் வாசி மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. இதனையடுத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதா தேவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் சரிதா தேவி பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். மற்ற வீராங்கனையை அழுதபடியே கட்டி தழுவிய சரிதா தேவி பதக்கத்தை கொரிய வீராங்கனையிடம் கொடுத்தார். பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிதா தேவி இந்திய அதிகாரிகள் மீதான தனது குற்றச்சாட்டை பதிவு செய்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில் மத்திய அமைச்சரும் சரிதாவுக்கு தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிப்பிக் அசோசியேஷனை கேட்டுக் கொண்டுள்ளார். "சரிதா விவகாரத்தில் நாங்கள் இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம்." என்று சர்பானந்தா சோனாவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, இந்திய அதிகாரிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து இருக்க வேண்டும். "அவர் வெற்றி பெற்றார் என்று நமக்கு தெரியும், நாம் அனைவரும் வருத்தம் அடைந்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.