மன்னிப்பு கோரியது குறித்து இந்திய வீராங்கனை சரிதா தேவி விளக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் நடுவரின் பாதகமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய வீராங்கனை சரிதாதேவி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து சரிதா தேவி பேசுகையில், நான் எனது நாட்டிற்காக மன்னிப்பு கோரினேன். என்னுடைய அணி வீரர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று பதக்கம் அளித்த மேடைக்கு சென்றேன். நான்தான் வெற்றி பெற்றேன் என்று என்னுடன் போட்டியிட்ட கொரிய வீராங்கனைக்கும் தெரியும். இது தொடர்பாக கொரிய வீராங்கனை பதக்கம் அளிக்கும் மேடையில் என்னிடம் பேசினார். என்றார். ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டை லைட் வெயிட் (60 கிலோ) பிரிவின் அரைஇறுதியில் இந்தியா வீராங்கனை சரிதா தேவிக்கு எதிராக உள்ளூர் வீராங்கனைக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கி விட்டனர். சிறப்பாக விளையாடியும் நடுவர்களின் ஒருதலைபட்சமான முடிவால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த சரிதாதேவி கண்ணீர் விட்டு கதறினார். பதக்கம் அணிவிப்பு நிகழ்ச்சி நடந்த போதும் தனக்கு நேர்ந்த அநீதியை நினைத்து சரிதாதேவி தேம்பி தேம்பிஅழுதார். கண்ணீர் மல்க அவர் பதக்கமேடையில் நின்று கொண்டிருந்தார். அவரது கழுத்தில் வெண்கலப்பதக்கத்தை அணிவிக்க ஆசிய விளையாட்டு அதிகாரி வந்த போது அதை ஏற்க சரிதாதேவி மறுத்தார். அந்த நிர்வாகி வற்புறுத்திய போதிலும் விசும்பி அழுதபடியே பதக்கத்தை நெஞ்சில் சுமக்க மறுத்த அவர் அதை கையில் வாங்கிக் கொண்டார். பிறகு திடீரென அவர் அந்த பதக்கத்தை தன்னை அரைஇறுதியில் தோற்கடித்த தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கின் கழுத்தில் அணிவித்து அனைவரையும் திகைப்படையச் செய்தார். அத்துடன் அந்த வீராங்கனையை கட்டித்தழுவி வாழ்த்துகளும் தெரிவித்தார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து சரிதா தேவி மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சியில் நான் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் யாரும் முன்கூட்டி திட்டமிடவில்லை. அப்படி திட்டம் தீட்டி இருந்தால்நான் பதக்கம் அளிக்கும் விழாவிற்கு வந்திருக்கவே மாட்டேன். இந்திய ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் ஆதரவு மனம் உடைந்த நிலையில் இருந்த என்னை மீண்டுவர செய்தது. நான் இந்த சம்பவத்தை மறக்க விரும்புகிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக நான் தயராக போகிறேன். நான் என்னுடைய திறமையை நிரூபிப்பேன். என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.