ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் நிரந்தரமாக இணைப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னையில் இயங்கி வரும் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய மாணவர்களின் சேர்க்கைக்கான அனுமதி கடந்த 20092010 ஆண்டு முதல் நீட்டிக்கப்படாமல் இருந்தது. இதனால் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு பெருவாரியான வரவேற்பு இருந்தபோதும் புதிய மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க இயலாத சூழல் நிலவியது. தற்போது டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக வழங்கப்பட்ட அனுமதியைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஆய்வுக்குழுவினரின் பரிந்துரையின்படி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆணை மூலம் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் நிரந்தர அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்குட்பட்ட 20142015 கல்வி ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கும் கல்லூரி செயல்பாட்டிற்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி அளித்துள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அளித்த முறையீட்டையும் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளையும் கருத்தில் கொண்டு, இக்குழு கீழ்காணும் பரிந்துரைகள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட தனது அறிக்கையினை மத்திய அரசிற்கு அனுப்பி உள்ளது. * இக்குழு ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை எம்.சி.ஐ. விதிகளின்படி உள்ளதாகவும், எந்த குறைபாடும் இல்லை எனவும் முடிவு செய்தது. * யு.ஜி.சி.யின் பரிந்துரைகளின் அடிப்படையில், குறுகிய கால பல்கலைக்கழக இணைப்பை ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு ஏற்கனவே வழங்கி உள்ளது. * உச்சநீதிமன்றம் 2012 பிப்ரவரி 24ம் தேதியிட்ட ஆணையில், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி குறித்து முடிவை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. எனவே இக்கல்லூரி குறித்த எந்தவித சட்ட சிக்கலும் கிடையாது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அனைத்து பரிமாணங்களிலும் சிறந்து விளங்குவதால் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தொடர்ந்து நீடிக்கிறது. மேற்கண்ட தகவலை ஏ.சி.எஸ். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.