அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகம் 7-ந்தேதி வினியோகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

1 முதல் 9ம் வகுப்பு வரை கல்வி ஆண்டுக்கான பாடத் திட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜூன்செப்டம்பர் வரை முதல் பருவ பாடங்களும், அக்டோபர்டிசம்பர் வரை இரண்டாம் பருவ பாடங்களும், ஜனவரிஏப்ரல் மூன்றாம் பருவ பாடங்களும் நடத்தப்படுகின்றன. இதற்கான பாடப் புத்தகங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மூன்று பருவ பாடப்புத்தகங்களும் தனித்தனியாக அச்சிடப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்து விட்டது. இரண்டாம் பருவ பாடங்கள் தொடங்க உள்ளன. வருகிற 7ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவமாணவிகளுக்கும் 2ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. நோட்டுகளும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப் புத்தகங்கள்நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.