ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8-வது இடம் பிடித்தது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 57 பதக்கங்களை வென்று 8-வது இடம் பிடித்ததுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானை பழிதீர்த்து தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கபடி போட்டியில் கிடைத்த இரண்டு தங்கப்பதக்கங்களின் மூலம் இந்தியா மொத்தம் 57 பதக்கங்கள் (11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம்) கைப்பற்றி பதக்க பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த முறையை (2010) விட இந்தியா குறைந்த பதக்கத்தையே வென்று உள்ளது. கடந்த முறை இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலப்பதக்கம் உள்பட மொத்தம் 65 பதக்கங்கள் வென்று 6-வது இடம் பிடித்து இருந்தது. 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் சீனாவின் ஆதிக்கமே இருந்தது. சீனா 151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என்று மொத்தம் 342 பதக்கங்களை வென்றது. இதற்கு அடுத்தப்படியாக தென்கொரியா 234 பதக்கங்களை வென்றுள்ளது. தென்கொரியா 79 தங்கம், 71 வெள்ளி, 77 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. ஜப்பான் 47 தங்கம், 76 வெள்ளி, 77 வெண்கலப் பதக்கம் என 200 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.