திருப்பதியில் சக்கரஸ்நானம் 9 நாள் பிரமோற்சவம் நிறைவடைந்தது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மாதம் 26ந் தேதி தொடங்கியது. 8ம் நாளான நேற்று காலை மகாதேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி தேரில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தார். இரவு தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 9ம் நாள் திருவிழாவான இன்று காலை கோவில் புஸ்கரணியில் சக்கரஸ்நானம் நிகழ்ச்சி நடந்தது. புஷ்கரணி மண்டபத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மலையப்ப சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. பின்னர் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த குளத்தில் புனித நீராடினார்கள். மொத்தம் 9 நாள் நடந்த திருவிழா இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இரவு கொடி இறக்கப்படுகிறது. விடுமுறை என்பதாலும், புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்து நின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நாளையும் பக்தர்கள் கூட்டம் இதே அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.