திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக பந்தக்கால் நடப்பட்டது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக அண்ணாமலையார் கோயிலில் இன்று பந்தக்கால் நடப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா வரும் நவ.26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. காலை, இரவு நேரங்களில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், முருகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். டிச.5ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்காக இன்று காலை 6.15 மணியளவில் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, அதிர்வேட்டு, மேளதாளம் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் செந்தில்வேலவன், நகராட்சி தலைவர் பாலச்சந்தர், பாஜக கோட்ட பொறுப்பாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.