பாரத் பல்கலை.க்கு சிறந்த புதுமைக் கல்வி நிறுவனம் விருது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

டெல்லியில் தேசியக் கல்வி மற்றும் ஆய்வுப் போட்டிக் குழுமம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 4 வது உலகக் கல்வி மாநாட்டில் பாரத் பல்கலைக்கழகத்திற்கு சிறந்த நூதன நோக்குக் கல்வி நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது என்று பாரத் பல்கலைக்கழக வேந்தர் எம்.பொன்னவைக்கோ கூறினார். பாரத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது தில்லியில் அண்மையில் நடைபெற்ற 4வது உலகக் கல்வி மாநாட்டில் இந்தியாவில் சிறந்த கல்விச் சேவையை புதிய நூதன நோக்குடன் வழங்கி வரும் கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து,பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வழக்கமான பாடத்திட்டங்கள் கொண்ட கல்வி நிறுவனங்களை விட சிறப்பாக நூதன புதுநோக்குப் பாடத்திட்டகளைக் கொண்டு நடத்தப்படும் கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து விருதுகள் வழங்கப்பட்டன. புதிய நூதன நோக்குக் கல்வி விருதுகளை டெல்லி ஐ.ஐ.டி.,காரக்பூர் ஐ.ஐ.டி.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய தேசிய கல்வி மற்றும் ஆய்வுப் போட்டிக்குழுமம்,பாரத் பல்கலைக்கழகத்திற்கும் அந்த விருதை வழங்கி கௌரவித்து இருப்பது பெருமைக்குரியது. பாரத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டப்படிப்புடன் ஆய்வுத்திட்டத்தையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இதனால் படிப்பை நிறைவு செய்வதற்கு முன் அமெரிக்கா,ஐரோப்பா,சிங்கப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முழுக் கட்டணச்சலுகையுடன் ஒரு பருவப்படிப்பைப் பெற வகை செய்யப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் 170 படிப்புகளும்,மருத்துவத்துறையில் 168 பாடங்களும்,பல்மருத்துவத்துறையில் 30 பாடங்களும் புதுநோக்கு பாடத்திடங்களாகச் செயல்படுத்தப்படுகின்றன என்றார் அவர். பாரத் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் கே.பி.தூயமணி,இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.