ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு பரிசுத்தொகை அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மொத்தம் 3.80 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற ஸ்ரீஜேஷ் பரத்து ரவீந்திரனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தங்கப்பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றிருந்த சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங், குஷ் குமார் ஆகியோருக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்ற தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா, அனகா அலங்காமணி, அபராஜிதா பாலமுருகன் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும். 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்ற ராஜீவ் ஆரோக்யா, படகுப்போட்டியில் வெண்கலம் வென்ற ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், வர்ஷா கவுதம் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. பதக்கம் வென்ற இந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், அவர்களின் பரிசுத்தொகை குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.