அறிவாற்றல் திறனுக்கேற்ப எல்லையற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன-காக்னிஜென்ட் துணைத்தலைவர்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பொறியியல் பட்டதாரிகளான உங்களது அறிவாற்றல் மற்றும் அர்ப்பணிப்புத் திறனுக்கேற்ப அனைத்துத் தொழில்துறைகளிலும் சர்வதேச அளவில் எல்லையற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று காக்னிஜென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத் துணைத்தலைவர் என்.லட்சுமி நாராயணன் கூறினார். சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 4வது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது இன்று பொறியியல் பட்டம் பெறும் உங்களுக்குப் பல்வேறு சிந்தனைகள் இருக்கும். ஏதேனும் வேலையில் சேருவது அல்லது மேற்படிப்பைத் தொடர்வது இல்லை ஏதேனும் சொந்தமாகத் தொழில் செய்வது ஆகிய இந்த மூன்றும் நல்ல முடிவுகள் தான். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது.நீங்கள் தொடர்ந்து உங்களது கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது ஆய்வுத்துறையில் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பும்,எதிர்காலமும் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக நாம் அதிக செலவில் மின்னணுவியல் தொடர்பான பொருட்களைத் தான் அதிக செலவில் இறக்குமதி செய்து வருகின்றோம்.அடுத்த 6 ஆண்டுகளில் ராணுவம்,மருத்துவம் ஆகிய துறைகளில் 10 மடங்காக அதிகரிக்கும் அளவில் பயன்படுத்தப்படும் மின்னணு தொடர்பான ஆய்வுகள்,பொருட்கள் உற்பத்தியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. தொழில்நுட்பத்திறனை மேம்படுத்த தொடர் ஆய்வு நடவடிக்கைகள் அவசியம் என்றார் அவர். விழாவில் 618 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் நிர்வாகக்குழுத் தலைவர் அப்துல்குவாதீர் ஏ.ரகுமான் புகாரி,துணை வேந்தர் ஜெ.ஏ.கே.தரீன்,இணை துணை வேந்தர் வி.எம்.பெரியசாமி,பதிவாளர் வி.முருகேசன்,மாணவர் சேர்க்கை இயக்குனர் வி.என்.ஏ.ஜலால் உள்பட பலர் பங்கேற்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.