எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு: 84 % மாணவர்கள் தேர்ச்சி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் சேர்ந்த 4,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வை அண்மையில் எழுதினர். அவர்களின் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழம் சனிக்கிழமை வெளியிட்டது. முதல் கட்ட தேர்ச்சி விகிதத்தின்படி 76 சதவீத மாணவர்கள் "அனாடமி', "ஃபிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றனர்; ஒரே ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்த மாணவர்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி (எம்சிஐ) சலுகை மதிப்பெண் அளித்ததன் மூலம் இறுதித் தேர்ச்சி விகிதம் 84 சதவீதத்தை எட்டியதாக பல்கலைக்கழக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இணையதளத்தில்...: தேர்வு முடிவுகளை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். அனைத்து மாணவர்களும் சனிக்கிழமை ஒரே நேரத்தில் தேர்வு முடிவை பார்க்கத் தொடங்கியதால், "கம்ப்யூட்டர் சர்வர்' பிரச்னை ஏற்பட்டதாகவும் அதைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.