தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேராவிட்டால் நியமனம் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை

| [ திரும்பி செல்ல ]

பணிக்கு உத்தரவு பெற்ற பின்னரும் பணியில் சேராமல் இருக்கும் ஆசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டித்துள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஓதுக்கீடு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. ஆணை பெற்ற பிறகும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் சிலர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தகவல் வந்துள்ளது. இப்படி பணி நியமன ஆணை பெற்ற பிறகும் அவர்கள் பணியில் சேராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும். இது தொடர்பான விபரங்களை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.