அமிதாப்புடன் சேர்ந்து சென்னைக்கு உற்சாகம் தந்த ரஜினி...

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தனது நீண்ட கால நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சனுடன் சேர்ந்து இண்டியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் சென்னை அணியை ஊக்குவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில், சச்சின் டெண்டுல்கரின் கேரளா அணியை எதிர்த்து விளையாடியது அமிதாப்பின் மகனும் நடிகருமான அபிஷேக்பச்சனின் சென்னை அணி. இந்தப் போட்டியை நேரில் காண சென்னை வந்திருந்தார் அமிதாப். அமிதாப் தகவல்... தனது சென்னைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தன்னுடன் அமர்ந்து சென்னை அணியின் வீரர்களை உற்சாகப் படுத்த ரஜினியும் வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் அமிதாப். ரஜினியின் வருகை... அமிதாப் கூறியது போலவே, ரஜினியும் நேரில் சென்று வீரர்களை ஊக்குவித்தார். கேரளா - சென்னை அணிகள் மோதிக் கொண்ட போட்டியை நேரில் கண்டு ரசித்தார். சச்சின்... அப்போது, கேரள அணியின் உரிமையாளரான சச்சின் டெண்டுல்கரும் ரஜினி மற்றும் அமிதாப் அமர்ந்திருந்த இருக்கைகளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு போட்டியைக் கண்டு களித்தார். வெள்ளை நிற உடை... அமிதாப்பும், சச்சினும் மஞ்சள் மற்றும் நீல நிற உடைகளை அணிந்திருக்க, ரஜினி வெள்ளை நிற உடையில் வந்திருந்தார். சென்னை அணி வெற்றி... கடைசியில் 2-1 என்ற விகிதத்தில் கேரள அணியை வீழ்த்தியது சென்னை அணி. இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அமிதாப். அதில், சென்னை மற்றும் தங்கள் அணி வீரர்களுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியை நேரில் காண வந்து வீரர்களை ஊக்கப் படுத்திய ரஜினிக்கும் தனது நன்றிகளை அவர் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.