உலக பெண்கள் டென்னிஸ்; இரட்டையரில் சானியா ஜோடி பட்டம் வென்றது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி பட்டம் வென்றது. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் இறுதியில் சானியா மிர்சா (இந்தியா)காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, சூய்பெங் (சீனா)சு வெய்ஹூசை (சீனத்தைபே) ஜோடியை எதிர்கொண்டது. போட்டியில் ஆரம்பம் முதலே சானியா ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. சானியா ஜோடிக்கு இணையாக நடப்பு சாம்பியனான சூய்பெங் - சுவேய் ஹூசை ஜோடியால் ஈடுகொடுக்க முடியாதநிலையே இருந்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியாபிளாக் ஜோடி 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றது. பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் சானியா மிர்சா ஆடுவது இதுவே முதல்-முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக பங்கேற்ற போட்டியிலே பட்டம் வென்றுள்ளார். காரா பிளாக் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெறும் மூன்றாவது பட்டம் இதுவாகும். வெற்றி பெற்ற சானியா மிர்சா- காரா பிளாக் ஜோடி 500 000 அமெரிக்க டாலர் பரிசு தொகையை பெற்றுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.