10-ம் வகுப்பு மற்றும் + 2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டது. அதன்படி, பிளஸ்-2 கால அட்டவணை: டிச- 10 ஆம் தேதி - தமிழ் முதல் தாள் .11 ஆம் தேதி - தமிழ் 2 ஆவது தாள். 12 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள். 15 ஆம் தேதி - ஆங்கிலம் 2 ஆவது தாள். 16 ஆம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல். 17 ஆம் தேதி - கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண்மை,அரசியல் அறிவியல், நர்சிங் மற்றும் தொழில் தேர்வுகள்: 18 ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் தேர்வுகள். 19 ஆம் தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், தட்டச்சு. 22 ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி. 23 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம். பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை: டிசம்பர் 12 ஆம் தேதி - தமிழ் முதல் தாள். 15 ஆம் தேதி - தமிழ் 2-வது தாள். 16 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள். 17 ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள். 19 ஆம் தேதி - கணிதம். 22 ஆம் தேதி - அறிவியல். 23 ஆம் தேதி - சமூக அறிவியல். தேர்வுகள்அனைத்தும் காலையில் நடக்கிறது என்ற இந்தத் தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.