எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் நவ. 7-க்குள் விண்ணப்பிக்கவும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் நவ. 7-க்குள் விண்ணப்பிக்கவும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன் வெளியிட்ட அறிக்கை: மார்ச், ஏப்ரல் 2015-ல் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுத விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு கடந்த 29-ம் தேதி முதல் புதுக்கோட்டை, அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வரும் 7-ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் புதுக்கோட்டை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். எனவே, இத்தேர்வெழுதத் தகுதியுள்ளவர்கள் மேல்குறிப்பிட்ட மையங்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் நேரில் சென்று தேர்வுக் கட்டணமாக ரூ. 125-ம், ஆன்லைன் பதிவு கட்டணம் கூடுதலாக ரூ. 50-ம் உள்பட மொத்தம் ரூ. 175 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.