நான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல் கூறினார் - ஜாகீர்கான்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல் என்னிடம் கூறினார் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு எழுதி இருக்கும் சுயசரிதை புத்தகம் வருகிற 6-ந் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் அந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இருந்த கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா) செயல்பாடுகள் குறித்து தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து டிராவிட்டை நீக்க எனது உதவியை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டார் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதற்கு சேப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு வீரர்களும் தங்களது தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், சேப்பல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர், ஒருநாள் என்னிடம் வந்து பேசினார். அப்போது ஜாகீர், நீ நான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் இந்திய அணிக்காக விளையாட முடியாது. என்று கூறினார். பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்து சச்சின் தெண்டுல்கர் வெளிப்படுத்திய தகவல்களுக்கு ஆதரவாக ஜாகீர்கானின் குற்றச்சாட்டு அமைந்துள்ளது. சேப்பல் அவ்வாறு பேசியபோது எவ்வாறு எதிர்க்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த ஜார்கீர்கான், சேப்பல் அவ்வாறு பேசியபோது கடும் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் சிலநேரம் செயல்பட முடியவில்லை. முற்றிலும் நிலைகுலைந்து போனேன். இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா? என்ன நடக்கிறது என்று கேப்டனிடம் பேசலாமா?. அவரது கருத்தை எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்? என் மீது ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார். என்று கேள்விகள் எழுந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை கிரேக் சேப்பல் இருந்தபோது (ஆஸ்திரேலியா) மோசமான மற்றும் இருண்ட நிலையே இருந்தது. என்று ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். "நான் ஒரு விஷயம் புரிந்தது கொண்டேன். அவர் தனிப்பட்ட செயல்பாட்டை கொண்டிருந்தார். அவருடைய எண்ணப்படி செயல்படவில்லை என்றால், நாம் ஒதுக்கப்படுவோம். அவர் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால் 2006ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் வலுவானநிலைக்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். என்று ஜாகீர்கான் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.