புனித சேவியர் உடலுடன் புனித யாத்ரீகர்கள் அதிக நேரம் செலவிட இந்த வருடம் வசதி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கோவாவில் புனித சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல் சவ பெட்டியில் வைத்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது வழக்கம். 10 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சி தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ளன. இந்நிலையில் இங்கு வரும் புனித யாத்ரீகர்கள் சவ பெட்டியுடன் நீண்ட நேரம் செலவிட அனுமதிப்பது என்ற முடிவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுத்துள்ளனர். இது குறித்து 2014ம் ஆண்டிற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆல்பிரெட் வாஸ் கூறும்போது, சவப்பெட்டியை புனித யாத்ரீகர்கள் முத்தமிட்டு விட்டு வழக்கமாக செல்வர். சில நேரங்களில் யாத்ரீகர்கள், தாங்கள் புனித பெட்டியை முத்தமிடுவதற்கு 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் தங்களுக்கு 5 வினாடிகள் கூட அதனுடன் செலவிட நேரம் கிடைப்பதில்லை என புகாராக தெரிவித்துள்ளனர் என்று ஆல்பிரெட் கூறியுள்ளார். எனவே, இந்த முறை அரை வட்டம் முறையை உருவாக்குவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதனால் பெட்டியை அவர்களால் நன்றாக பார்க்க முடியும். அவர்கள் சவ பெட்டியை 2 சுற்றுகள் சுற்றி அதன் பின் அதனை முத்தமிட்டு விட்டு வெளியே செல்ல முடியும். இதனால், பெட்டிக்கு மிக அருகே சென்றதை அவர்களால் உணர முடியும். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் இதற்காக பணியாற்றியுள்ளோம் என்று ஆல்பிரெட் கூறியுள்ளார். புனித உடலை முத்தமிட்ட பின்னர் புனித யாத்ரீகர்கள் சே கதீட்ரல் ஆலயத்திற்கு மீண்டும் வர முடியும். அங்கு அவர்கள் வழிபாடு நடத்த முடியும். அதிகமான நேரத்தை அவர்கள் செலவிட முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். பாம் ஜீசஸ் ஆலயத்தில் உள்ள உடலானது ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள சே கதீட்ரல் ஆலயத்திற்கு வருகிற நவம்பர் 22ந்தேதி கொண்டு வரப்படும். அது பொது மக்கள் பார்வைக்கு வருகிற ஜனவரி 4, 2015 வரை திறந்திருக்கும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.