நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி நடிகை கே.ஆர்.சாவித்திரியின் மகளும் நடிகையுமான ராகசுதா கடந்த சில வருடங்களாக நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆன்மீகப்பணிகள் செய்துகொண்டிருந்தார். நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானபோது கூட ராகசுதா ஆசிரமத்தில்தான் இருந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை ராகசுதா திடீரென குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்பி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சிந்து நதி பூ,மறுமலர்ச்சி, டான்சேரா, பாண்டவர் பூமி, பசுபதி கேர் ஆப் ராசாக்கபாளையம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் ரஞ்சித் அவர்களே ராகசுதாவை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நடிகர் ரஞ்சித் ஏற்கனவே நடிகை ப்ரியாராமனை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதித்யா, ஆகாச் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். ரஞ்சித்-ராகசுதா திருமணம் சென்னையில் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மும்முரமாக செய்துகொண்டு வருகின்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.