ஏரியை தூர் வாரி தன் பிறந்த நாளைத் தொடங்கிய கமல் ஹாஸன்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரதமர் நரேந்திர மோடி தனது தூய்மை இந்தியா திட்டத்தை ஆரம்பித்த போது அழைப்பு விடுத்த 9 பேரில் நடிகர் கமல் ஹாஸனும் ஒருவர். இதற்கு நன்றி தெரிவித்த கமல், 9 மில்லியன் பேருக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் தனது பிறந்த நாளன்று மாடம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்து, தூய்மை இந்தியா பணியைத் தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை வேளச்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ஏரிக்கு வந்த கமல் ஹாஸன், தனது நற்பணி இயக்கத்தினருடன் இணைந்து குப்பை அள்ளும் பணியைத் தொடங்கி வைத்தார். அவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், தனது ரசிகர்கள் தமிழகத்தில் 25 இடங்களில் இந்தப் பணியை செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த ஏரி இந்த ஏரியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எனக்கும் சொந்தம். தமிழர்களுக்கு சொந்தம். என் வீட்டுக்கு பொருளுக்கு சேதம் அடைந்தால் எவ்வளவு கவலைப்படுவோமோ, அவ்வளவு கவலைப்பட வேண்டும். எனது வீட்டுப் பொருளை எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்வேனோ, அப்படிஇந்த ஏரியை சுத்தமாக வைத்துக்கொள்வேன். இது எனது ஏரி. உமதும்தான். இவ்வாறு பேசினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.