குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர் அரங்கநாதன் விருது வழங்கும் விழா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

குழந்தைகள் தினவிழா சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி அவர்கள் தலைமையில் குழந்தைகள் தினவிழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று (நவ.14) நடைபெற்றது. குழந்தைகள் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 53 பேருக்கு பரிசு வழங்கப்பட்டன. சதுரங்கபோட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவ-மாணவிகளுக்கு பரிசு கொடுக்கப்பட்டன. சிறந்த நூலகர்களுக்கான விருது 47 பேருக்கு வழங்கப்பட்டன. பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கி பாராட்டினார். விழாவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.