நாளை என்ன நடக்கும் என தெரியாது: லிங்கா விழாவில் ரஜினிகாந்த்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

படம் பண்றது ஈஸிங்க, அரசியல் போறது ஈஸிங்க, ஆனால் வெற்றி கொடுக்கணும்ல என்று லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள லிங்கா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ள ரஜினி வந்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விழாவில் பேசிய ரஜினி கூறுகையில், படம் பண்றது ஈஸிங்க, அரசியல் போறது ஈஸிங்க, ஆனால் வெற்றி கொடுக்கணும்ல. படப்பிடிப்பு தளத்தில் ரவிக்குமார் என்னை ஒரு குழந்தையை போன்று பார்த்துக் கொண்டார். இந்த படத்த 6 மாசத்துல முடிக்கக் கூடிய ஒரே ஆளு அவர் மட்டும் தான். நான் லேட் பண்ணுவேன்... ஆனால் ஒரு விஷயத்தில் இறங்கினா டக்குன்னு இறங்குவேன். அரசியல் ஆழம். அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்கிக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஏதாவது நடந்தால் நான் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன். லிங்கா படக்குழுவின் அன்பையும், ஆதரவையும் பார்த்து நெகிழ்ந்தேன் என்றார் ரஜினி.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.