சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு விருது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கோவாவில் இன்று மாலை 45-வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியது. இவ்விழாவில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பரிக்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். இவ்விழாவில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து வழங்க நடிகர் ரஜினிகாந்த் விருதினை பெற்றுக்கொண்டார். மேலும், இவ்விருதினை தனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக கருதுவதாகவும், இந்த வெற்றியை பெற ஆதரவாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.