தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நேபாள அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் காங்கோம் பாலா தேவி 4 கோல்கள் அடித்து அசத்தினார். தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டி 2010ல் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை நடைபெற்ற மூன்று சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்திய அணி பட்டம் வென்றுள்ளது. தொடர்ந்து 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஓய்வுபெறுவது மேலும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கேப்டன் ஆயினம் பெம்பம் தெரிவித்தார். பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரையில் போதிய அனுபவம் இல்லாமல் விளையாடியபோதும் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடியதாகவும் பெம்பம் பாராட்டினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.