இந்திய பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச பாகிஸ்தான் பிரதமர் ஒபாமாவுக்கு வேண்டுகோள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வர அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்தியா வரும் போது இந்திய தலைமையிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து குரல் எழுப்ப வேண்டும் என ஒபாமாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய, நவாஸ்ஷெரிப் ஒபாமாவை வரவேற்க பாகிஸ்தான் மக்கள் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். விரைவில் பாகிஸ்தான் வரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வரும் 2015 ஜனவரி 26ல் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை, அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் சர்வதேச தலைவர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரப்படுத்துவது வழக்கம். 1950ல் நடந்த முதல் குடியரசு தினவிழாவுக்கு அன்றைய இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அதேபோன்று இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (1961), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (2007), ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (2014) உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த எவரும், இதுவரையில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வரும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு, ஒபாமாவுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஒபாமா இந்தியா வரவுள்ளார். இதனையடுத்து, இந்தியா வரவுள்ள ஒபாமாவிடம், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய தலைமையிடம் குரல் எழுப்ப பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.