மங்கள்யான் - டைம் இதழின் 2014ம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்தாண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாக இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகின் சிறந்த 25 அறிவியல் கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து பெருமைப்படுத்தி வருகி றது. இந்தாண்டுக்கான 25 அறிவியல் கண்டுபிடிப்புகளை தற்போது அறிவித்துள்ளது. இதில், இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த மங்கள்யான் விண்கலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தை விட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலத்தை டைம் இதழ் சூப்பர் ஸ்மார்ட் விண்கலம் என புதிய பெயரை சூட்டியுள்ளது. மேலும், செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இதுவரை யாருமே நிகழ்த்தாத சாதனையை மங்கள்யான் நிகழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் கூட முதல் முயற்சியிலேயே தங்களது விண்கலத்தை செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியவில்லை. ஆனால், இந்தியா சாதித்துள்ளது என மங்கள்யான் பற்றி பெருமையாக கூறி உள்ளது. மேலும், 25 கண்டுபிடிப்புகளில் 2 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனங்களும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் கூகுள் நிறுவன பொறியாளரான பிரமோத் சர்மா தயாரித்த ஓஸ்மோ என்ற குழந்தைகளுக்கான விளையாட்டு டாப்லெட்டும், மன அழுத்தத்தில் இருந்து சிறைக்கைதிகள் விடுபடுவதற்காக அவர்களின் சிறை அறையை புதுமையாக வடிவமைத்த வன ஆராய்ச்சியாளர் நளினி நட்கர்னியின் கண்டுபிடிப்பும் இடம் பெற்றுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.