தாயின் பிணத்தை தோண்டி செல்பி எடுத்த மகன்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. தாய் பிணத்துடன் செல்பி... அதிலும், பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமான அவரது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்பி எடுத்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவரிடம் பேட்டி எடுத்தது. அந்த சந்திப்பில் மனநல மருத்துவர் ஒருவரும் பங்கேற்றார். அப்போது பேசிய டெப், தனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்ததாகவும், ஆனால், மரணங்கள் தனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை தான் நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை தான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மனநல பாதிப்பில்லை... டெப்பின் இந்த பேட்டியைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிச்சயம் டெப்பிற்கு மனநல பாதிப்பு இருக்க வேண்டும் என அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், டெப்பின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என இந்த பேட்டியில் கலந்து கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் இவ்வாறு டெப் சடலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.