பரங்கிமலை ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீபாண்டுரங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்;23- சென்னை பரங்கிமலை மேட்டுத தெருவில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீபாண்டுரங்க சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ ராமபிரான் கானகம் வரும்போது ஒவ்வொரு ரிஷியாக சந்தித்து அருள்புரிந்து வந்தார். அப்பொழுது அவர் பரங்கிமலை எனப்படும் பிருங்கிமாமலை வரும்போது பிருங்கி முனிவரையும் சந்தித்து அருள்புரிந்தார். இந்த விஷேசமான பிருங்கி மாமலை அடிவார மேட்டுத்தெருவில் ருக்மணி சதயபாமா சமேத ஸ்ரீபாண்டுரங்கன் விக்கரக வடிவில் அர்ச்சாரூபியாய் நம் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார். \"சென்னையில் ஒரு பண்டரிபுரமாக\" திகழும் இக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஸ்ரீபாண்டுரெங்க பக்த ஜன சபை முடிவு செய்து முதற்கட்டமாக 4-09-2009 வெள்ளியன்று பாலாலயம் ஸ்ரீ வைகாஸைஆகம முறைப்படி நடந்தது. இதையடுத்து 03-10-2009 சனியன்று காலை பூமி பூஜையும் நடந்தேறியது. இப்போது முத்தாய்ப்பாக இன்று காலைருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீபாண்டுரங்க சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபாண்டுரெங்க பக்த ஜன சபை திருப்பணிக்குழு பக்த நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவரும்க்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.