ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெறும் சதி திட்டம்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அமெரிக்காவின் கறுப்பின போராளிகளை தங்கள் இயக்கத்தில் சேர்க்க ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது இயக்கத்தில் ஆள் சேர்க்கும் பணியை சமூக வலைதளங்களின் மூலம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பெர்குசன் (Ferguson) மாகாணத்தில் வெடித்துள்ள கறுப்பின வன்முறையை தங்களுக்கு சாதகமாக பயப்படுத்தி கொண்டு ஆள் சேர்க்க நினைத்த ஐ.எஸ்.ஐ.எஸ், டுவிட்டரில் கறுப்பின போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் டுவிட்டரில் கூறியதாவது, எங்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்து, இஸ்லாமிய மதத்திற்கு மாறி தலைவர் அல்பாக்தாதியிடம் சரணடையுங்கள் என்றும் கறுப்பர்களே.. உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை வீழ்த்தவே கறுப்பின போராளிகளை இவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ் மூளைச்சலவை செய்வதாக கூறப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.