வடகொரிய அதிபரின் தங்கைக்கு முக்கிய பதவி.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வடகொரியா நாட்டின் அதிபர் கிங் ஜாங் யுன் தனது கட்சியில் அவரது தங்கைக்கு துணை துறை இயக்குனர் என்ற முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். வடகொரிய அதிபரின் நம்பிக்கைக்குரிய தங்கை கிம் யோ யாங் அவர்களுக்கு 26 வயது ஆகின்றது. அதிபர் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரது தங்கையும் கலந்துகொள்வார். இதிலிருந்தே அதிபர் தனது தங்கைக்கு கூடிய விரைவில் ஏதாவது பொறுப்பை ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கிங் ஜாங் யுன்னின் தொழிலாளர் கட்சியில் மத்திய குழு துணை துறை தலைவராக கிம் யோ-யாங் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்த தகவலை வடகொரியாவின் செய்தி ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்து உள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜாங் சாங்-தேக்கின் மனைவியும், யோ-யாங்கின் அத்தையுமான கிம் கியோங்-ஹுய் இதே பொறுப்பில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாங்-தேக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் மத்தியில் கிம் கியோங்கை இதுவரை காண முடியவில்லை.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.