கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களை சேர்க்கத் தயார் - மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான பேச்சுக்கள் பல சுற்றுக்களாக நடந்து வந்தன. வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்குமாறு கடைசியாக அழகிரியிடம், கருணாநிதி தரப்பில் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசியுள்ளார். பிடிஐ நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2016 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்போமா? என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை. சட்டசபைத் தேர்தலையொட்டி நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தி வருகிறேன். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து கட்சிக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும், வெளியேறியவர்களும் திமுக என்ற மிகப் பெரிய குடும்பத்தின் அங்கத்தினர்கள்தான்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.