ராஜபக்சே ஏஜெண்ட் சுப்பிரமணியன் சுவாமி- வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தவர்.. வைகோ காட்டம்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஏஜேண்ட்தான் சுப்பிரமணியன் சுவாமி என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த அவரிடம் பாரதிய ஜனதா கட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி: என்னை அநாகரிகமாக பேசிய பாரதிய ஜனதாவின் எச். ராஜாவை கண்டித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். அவர்களை விமர்சித்த போதெல்லாம் இப்படி மிரட்டல் விடுத்தது கிடையாது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படப் போவதில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஏஜெண்ட்டாகத்தான் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருகிறார். இல்லையெனில் பாரத ரத்னா விருதை ராஜபக்சேவுக்கு கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்வாரா? இன்று ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்போம் என்றால் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது கொடுப்பீர்களோ? நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்று தெரிந்துதான் அன்று வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் என்னை கூட்டணியில் வைத்திருந்தனர். ஆனால் வாஜ்பாய் ஆட்சி நீடிக்க விடாமல் அத்தனை கொடுமைகளையும் செய்து அந்த ஆட்சியையே கவிழ்த்தது இதே சுப்பிரமணியன் சுவாமிதான். இதனால் சுப்பிரமணியன் சுவாமியிடம் பாரதிய ஜனதா கட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.