அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் ஜெயலலிதா அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள்; நகரங்களுக்கு உள்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிகளுக்கு உள்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதல் கட்டத் தேர்தல்களை வருகின்ற 11122014 வியாழக்கிழமை முதல் 15122014 திங்கட்கிழமை வரை நடத்திடும் வகையில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 6ம் கட்ட தேர்தல் அதேபோல், மேற்கண்ட 10 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள்; நகரக் கழக நிர்வாகிகள்; பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு 1322015 முதல் 1522015 வரை நடைபெற உள்ள 6ம் கட்டத் தேர்தல்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களே நடத்துவார்கள். கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள்; மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு கழகத்தினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.