திருவண்ணாமலை: இன்று மலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு சென்றனர்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் விழா வருகிற 5ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக இன்று காலை மகாதீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். கோவிலில் கிளிகோபுரம் அருகே உள்ள நந்திசிலை அருகே வேதமந்திரங்கள் முழங்க மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்தனர். கோ பூஜையும் செய்யப்பட்டது. கொப்பரைக்கு கோவில் யானைருக்கு ஆசி வழங்கியது. இதனையடுத்து கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாவல்பூண்டி கிராமத்தை சேர்ந்த மகாதீப கொப்பரையை மலைக்கு எடுத்து செல்லும் பரம்பரையினர் 350 கிலோ கொண்ட கொப்பரையை மலை உச்சிக்கு சுமந்து சென்றனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷமிட்டபடி 2668 அடி உயர மலை உச்சிக்கு கொப்பரையை சுமந்து சென்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.